Singapenne: ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டிய அன்பு.. பரபரப்பான திருப்பங்களுடன்
ஆனந்தி அக்கா திருமணத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அன்பு ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டிய காட்சிகள் ப்ரோமோவாக வெளியிடப்பட்டுள்ளது.
கிராமத்து பெண்ணை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதைக்களமே சிங்கப்பெண்ணே, தைரியமான எதையும் சமாளிக்கக்கூடிய துணிச்சலான பெண் ஆனந்தி.
தன்னுடைய குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக சென்னை வரும் ஆனந்திக்கு வாழ்வில் எதிர்கொள்ளும் திடீர் சிக்கல்கள், போராட்டங்கள் நிறைந்த கதைக்களத்துடன் டாப் 1 சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது சிங்கப்பெண்ணே.
ஆனந்தியை அன்பு மற்றும் மகேஷ் என இருவரும் காதலிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் அழகனாக உதவிசெய்யும் அன்புவின் மேல் ஆனந்திக்கு காதல் வருகிறது.
இது மகேஷ்க்கு தெரியவர பிரச்சனை பெரிதாக வெடிக்கிறது, ஆனால் மித்ராவின் சூழ்ச்சியால் ஆனந்தி கர்ப்பமாக யார் இதற்கு காரணம்? என தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்.
இதனால், அன்புடன் எனக்கு திருமணம் நடக்கும் என்பதை மறந்து விடுங்கள் என ஆனந்தி அன்புவின் அம்மா லலிதாவிடம் சொல்லி இருந்தாள்.
ஆகையால், அன்புவின் அம்மா துளசியை உள்ளே கொண்டு வருகிறார். இப்படியே கதை நகர்ந்தது.
இப்படியான நிலையில், ஆனந்தியின் அக்கா கோகிலாவின் திருமண நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஆனந்தியும் அன்புவும் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்கள். இதைப் பார்த்த மகேஷ் அங்கிருந்து வருத்தத்தோடு சென்றுவிடுகிறார்.
இப்படி இருக்கையில், காலையில் கோகிலாவின் திருமணம் நடைபெறவிருக்கும் சமயத்தில், இரவே கோகிலாவை சுயம்புலிங்கம் கடத்திவிடுகிறான்.
கோகிலாவை வைத்து அவர் ஆனந்தியை மிரட்டுகிறான். அதாவது நீ என்னை திருமணம் செய்துக்கொண்டால்தான், கோகிலாவுக்கு திருமணம் நடக்கும் என்று கூறுகிறார்.
உடனே ஆனந்தி சுயம்புலிங்கத்தை தேடி போகிறாள். எப்படியும் ரெஜினா மற்றும் சௌந்தர்யா மூலம் அன்பு இதை தெரிந்து கொள்வான்.
சுயம்பு லிங்கத்தை அடித்து துவம்சம் செய்து விட்டு, ஆனந்தியையும், அவளது அக்காவையும் காப்பாற்றி விடுகிறான்.
முகூர்த்த நேரத்தில் ஆனந்தி அக்காவுக்கு திருமணம் நடைபெறும் சமயத்தில், அன்பு ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டுகிறான். இதை சற்றும் எதிர்பாராத ஆனந்தி உட்பட அனைவரும் அதிர்ச்சியாகின்றனர், இத்துடன் ப்ரோமோ முடிகிறது.