இந்த சாதாரண உடை இத்தனை லட்சமா? வருங்கால மனைவியுடன் ஆனந்த் அம்பானி
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி தனது வருங்கால மனைவி ராதிகாவுடன் துபாயில் பொழுதை கழித்து வருகின்றார்.
ஆனந்த் அம்பானி
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி. ஆகாஷ் மற்றும் அனந்த் அம்பானி தனது இரண்டு மகன்களும் தந்தைக்கு நிகராக புகழ்பெற்று வருகின்றனர்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி உடல் எடை அதிகரித்து இருப்பதால் பொது இடங்களில் அதிகம் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இவருக்கு ஆஸ்துமா பிரச்சினையும் இருந்து வரும் நிலையில், கடந்த 2016ம் ஆண்டு அனைவரும் வியக்கும் நிலையில் தனது உடல் எடையை 108 கிலோவாக குறைத்தார்.
பின்பு சில காரணங்களால் உடல் எடை அதிகரித்த அவர், தற்போது தனது வருங்கால மனைவியுடன் துபாய் சென்றுள்ளார்.
துபாயில் வணிக பிரமுகர்களுடன் நடந்து சென்ற காட்சி வைரலாகி வருகின்றது. இந்த காட்சியில் அனந்த் அம்பானி அணிந்து வரும் ஊதா நிற உடை அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த உடையானது பிரெஞ்சு நாட்டு ஆடம்பர பிராண்டை சேர்ந்ததாம். இதன் விலை 3599 யூரோ என்று கூறப்படுகின்றது. அதாவது இந்திய மதிப்பில் 3,13,428 ரூபாய்.
சும்மா வாக்கிங் போக இத்தனை லட்சம் பெறுமானம் உள்ள ஆடையா என்று மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |