இரண்டு சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பிரச்சனையா? உண்மை தகவல் இதோ
ஒரு நபர் இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பயன்படுத்தி வந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியான நிலையில், இதன் உண்மை தன்மையைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஒரே மொபைலில் இரண்டு சிம்
பொதுவாக பெரும்பாலான நபர்கள் பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை சிலர் தனித்தனியான போன்களில் பயன்படுத்திவந்தாலும், அதிகமானோர் ஒரே மொபைல் போனில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரே மொபைலில் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
இந்த சந்தேகத்திற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளித்துள்ளது. இதனை TRAI மறுத்துள்ளது.
கடந்த 2022ல் தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தேசிய எண் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி கேட்டதாகவும் TRAI தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பின் பயன்பாட்டை பாதிக்கும் அனைத்து அம்சங்களையும் மதிப்பிடுவதே நோக்கமாக கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் சில திட்டங்கள் மற்றும் எதிர்கால தேவைகளுக்கான வளங்களை உறுதி செய்வததே இதன் குறிக்கோள் என்று TRAI தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் வைத்திருப்பவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்ற தகவல் பொய் என்று TRAI திட்டவட்டவமாக மறுத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |