தண்ணீருக்குள் பதுங்கியிருந்த அனகோண்டா! நுலிழையில் உயிர்தப்பிய நபர்: திக் திக் காட்சி
உல்லாசமாக படகு சவாரி செய்யும்போது, திடீரென அனகோண்டா கண் முன்னே வந்து சீறினால் என்ன ஆகும்? வைரல் வீடியோவாக சமூக ஊடகங்களில் வலம் வரும் என்பது இன்றைய உலகின் பதிலாக இருக்கிறது.
பிரேசிலில் ஒருவர் படகில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது, தண்ணீருக்கு அடியில் அமர்ந்திருந்த அனகோண்டா பாம்பை படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
என்னைய படம் எடுக்கற? நான் காட்டுறேன் என் படத்தை என்று அனகோண்டா திடீரென சீறிப் பாய்ந்து படமெடுத்தது. இதில் பாம்புக்கு பல்பு கொடுத்து உயிர் தப்பினார் அந்த அதிர்ஷ்டசாலி.
அவர் ஒரு வழிகாட்டி. அனகோண்டா பாம்பு தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
38 வயதான ஜோயோ செவெரினோ Joao Severino என்பவர் இந்த வீடியோவை படம் பிடித்திருக்கிறார். இது தனக்கு நேர்ந்த விபத்தை தானே படம் எடுத்தது என்ற அபூர்வ வீடியோ வகையிலும் வருகிறது.
குறித்த சம்பவம் ஜூன் 30ம் தேதியன்று மத்திய பிரேசிலின், கோயாஸில் அரகுவாயா ஆற்றில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.