சிக்கனுக்கு சாஸ் அனுப்பறியா.. இல்ல வெடிகுண்டு அனுப்பவா? பூனைகளுக்கு ஊரடங்கா?
அமெரிக்காவில் சிக்கன் நகட்டுக்கு சாஸ் தராத உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாடிக்கையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டன.
நோய் தொற்றின் பரவல் விகிதம் குறைந்தவுடன் அந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஆஸ்திரேலியாவில் விந்தையாக பூனைகள் பொதுவெளியில் செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மீறும் குடியிருப்புவாசிகளுக்கு பெரும் தொகை அபாரதமாக விதிக்கப்படும் என்றும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது போன்ற பல சுவாரஷ்யமான தகவல்களுடன் வினோத உலகம் காணொளி வெளியாகியுள்ளது. பார்த்து ரசியுங்கள்.