நீங்கள் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல? நடிகை எமி ஜாக்சனை கேட்ட மகன்
பிரபல நடிகை எமி ஜாக்சனிடம் அவருடைய ஒரே மகன், நீங்கள் ஏன் அம்மா இன்னும் திருமணம் பண்ணவில்லை என்று கேட்டுள்ளார்.
ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்துக் கொண்டவர் எமி ஜாக்சன்.
கடந்த 2019 ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்துவிட்டனர்.
தற்போது இவர் எட் வெஸ்டிக் என்பவரை காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதன்போது இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது மகனும் எனது காதலனும் மிகவும் நண்பர்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் எனது மகன் நீங்கள் ஏன் அம்மா திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதில் இருந்து எனது மகன் எனது காதலை புரிந்து கொண்டான் என்றே நான் எண்ணுகிறேன்.
இந்த கேள்வியை என்னுடைய மகன் எனது காதலனிடமும் கேட்டார். என் அம்மாவை இன்னும் ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கேட்டான்.
எனவே எங்கள் காதலுக்கு என் மகன் சம்மதித்து விட்டான், நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்றார் எமி ஜாக்சன்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |