இலங்கையில் அப்படி நடந்தது... அது தவறு தானே! மனம் திறந்த நடிகர் அரவிந்த்சாமி
நடிகர் அரவிந்த்சாமி உடல் நிலை சரியில்லாமல் இருந்த வேளையில், சமூகத்தின் மூலம் தான் அனுபவித்த வேதனைகள் பற்றி பேட்டி ஒன்றின் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
90ஸ் களின் சூப்பர் ஹீரோவாக வலம்வந்தவர் அரவிந்த்சாமி, இன்றுவரை இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறுகையில், நான் உடல்நிலை சரியில்லாத போது பல மாத்திரைகளை எடுத்து கொண்டதால் மிகவும் குண்டாக சொட்டையாக இருந்தேன்.
இதை எல்லோரும் கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பகிர்ந்து வந்தனர்.
இதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, நாம் ஒரு விஷயத்தை எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.
நான் அழகாக இருக்கிறேன் என்று நான் நினைக்கவில்லை, அதனால் எனக்கு இதில் எந்தவித பாதிப்பும் இல்லை.
ஆனால் இந்த உடல் நிலையில் நான் இருக்கும் போது எனக்கு ஒரு விஷயம் நடந்தது அது என்னை மிகவும் பாதித்தது. நான் என்னுடைய குடும்பத்துடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்தேன்.
அப்போது என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். அந்த இடத்தில் ஒரு ஹோட்டலில் நான் சாப்பாடு எடுக்க சென்ற நேரத்தில், அங்கு இருந்த பெண்மணி ஒருவர் என்னுடைய குழந்தையிடம் அப்பாவை குறைவாக சாப்பிட சொல் என்று சொன்னார்.
இது கண்டிப்பாக என்னை பாதிக்காது, ஆனால் இந்த வார்த்தை எனது குழந்தைகளை பாதிக்கும் அவா்கள் மிகவும் சிறியவர்கள்.
ஒரு மனிதரின் நிலையை அறிந்து மற்றவர்கள் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |