4வது காதலரை அறிமுகம் செய்த நடிகை எமி ஜாக்சன் - இவரும் ஒரு நடிகரா?
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். அதன் பின்னர் விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ் உதயநிதி ஸ்டாலின் என பல நடிகர்களுடன் படங்களில் நடித்துவிட்டார்.
இவர் 6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். அதன் பின் குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் மலர்ந்த காதலையும் முறித்தார்.
தொடர்ந்து லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜை காதலித்து திருமணத்தை நிச்சயம் செய்த நிலையில் கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

4வது காதலர்
அப்போதே கவர்ச்சியில் கிரங்கடித்த இவர், பின்னர் ஜார்ஜை பிரிவதாக அறிவித்து பிரிந்தார். இந்நிலையில் சமீபத்தில் 4வதாக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சனுக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவியது.
இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் நான்காவது காதலரை அறிமுகம் செய்துள்ளார் எமி ஜாக்சன்.
மேலும், எட் வெஸ்ட்விக் உடன் இறுதியாக தங்கள் உறவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஸ்பெயினுக்கு அவர்கள் சென்ற இடத்திலிருந்து பெஞ்சில் அமர்ந்திருக்கும் படத்தை எட் பகிர்ந்துள்ளார்.
அதே நேரத்தில் எட் எட் தனது கைகளை அவரைச் சுற்றிக் கொண்டு ஒரு செல்ஃபியைப் பகிர்ந்து கொண்டார். எட் வெஸ்ட்விக் ஒரு பிரபலமான அமெரிக்க நடிகராம்.
இதை பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா லிஸ்ட் ரொம்ப நீளமா போய் கொண்டே இருக்கிறது என கேள்விக்கேட்டு வருகின்றனர்.