ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காய்... எந்த உணவுடன் சாப்பிடக்கூடாது?
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காயை எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெள்ளரிக்காய்
கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை நமது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.
அந்த வகையில் கோடை காலத்தில் விரும்பி சாப்பிடும் பொருளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதிக அளவு நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதுடன், இதனை பச்சையாகவும், சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம்.
ஆனால் வெள்ளரிக்காயை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனை உட்பட சில விளைவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தயிர்
வெள்ளரிக்காயை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இவை இரண்டு செரிமான செயல்முறை வேறுபட்டுள்ளதுடன், வெள்ளரிக்காயில் அதிகமாக தண்ணீர உள்ளதால் விரைவில் ஜீரணமாகிவிடுமாம். ஆனால் தயிரில் புரோட்டீன் மற்றும் கொழுப்புகள் உள்ளதால் ஜீரணமாவதற்கு சற்று நேரம் எடுப்பதுடன், இது வயிறு உப்புசம், வாயு, வயிற்றுப் போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்
இதே போன்று சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களுடன் வெள்ளரிக்காய் சேர்த்து சாப்பிடுவது கூடாது. ஏனெனில் இது நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
தக்காளி
வெள்ளரிக்காயை தக்காளியுடன் சேர்த்து சாப்பிடுவது தவறாகும். ஏனெனில் வெள்ளரிக்காய் சீக்கிரம் ஜீரணமாகிவிடும். தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் விதைகள் ஜீரணமாவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளுமாம். இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வீக்கம், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
முள்ளங்கி
வெள்ளரிக்காயுடன் முள்ளங்கியை ஒருபோதும் சேர்த்து சாப்பிடவே கூடாது. இவை இரண்டையும் சேர்ந்து சாப்பிட்டால் உடலில் வைட்டமின் சி அளவை குறைப்பதுடன், வயிற்றில் அசௌகரித்தை ஏற்படுத்தும்.
இறைச்சி
புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த இறைச்சியுடன் வெள்ளரிக்காய் சாப்பிடுவது கூடாது. ஏனெனில் இவை வயிற்றுலவி மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |