திருமணமாகாமல் குழந்தைக்கு அம்மாவான பிரபல நடிகை! புதிய காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்?
திருமணமாகாமல் தனது மூன்றாவது காதலர் மூலம் ஆண்குழந்தையை பெற்றெடுத்த நடிகை எமி ஜாக்சன் நான்காவது காதலருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
நடிகை எமிஜாக்சன்
மாடல் மற்றம் நடிகையான எமி ஜாக்சன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்பு ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களிலும், கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2.0 என்ற படத்திலும் நடித்தார். இந்த பிரம்மாண்ட திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது.

எமி ஜாக்சனுக்கு பிறந்த ஆண் குழந்தை
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து பிஸியாக இருக்கும் இவர், ஜார்ஜ் என்ற தொழிலதிபரை மூன்றாவதாக காதலித்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வந்தார். திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நிலையில், சினிமா வட்டாரங்களில் இது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
பின்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், குறித்த குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என்ற பெயரை குறித்த தம்பதிகள் வைத்தனர்.
குழந்தை பிறந்த பின்பும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவர்களுக்கு திடீரென மனக்கசப்பு எற்பட்டு காதலரை பிரிவதாக அறிவித்தார். இது சமூகவலைத்தளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியது.

தோல்வியில் முடிந்த மூன்று காதல்
இந்நிலையில் எமிஜாக்சன் நான்காவது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
முதலாவதாக ஆறு வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து வந்த நிலையில் அவரை பிரிந்தார் எமி ஜாக்சன். பின்பு இரண்டாவதாக ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்கை எமிஜாக்சன் காதலித்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
மூன்றாவதாக லண்டன் ஓட்டல் அதிபர் ஜார்ஜை காதலித்த நிலையில், அவர் மூலமாக ஆண் குழந்தை பிறந்த பின்பு அவரையும் திருமணம் செய்யாமல் பிரிந்தார்.
நான்காவது காதலருடன் நெருக்கமா?
தற்போது நாலாவதாக இவர் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது.
ஏற்கனவே நடிகர் எட் வெஸ்ட்விக் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டமார் என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து பிரிந்த நிலையில், பாலியல் புகாரிலும் சிக்கியுள்ளார்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பெண்கள் எட் வெஸ்ட்விக் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவருடன் எமிஜாக்சன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை அவதானித்த நெட்டிசன்கள் நான்காவது காதலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.