தூக்கத்தை கெடுக்கும் அமுக்குவான் பேய் பற்றி தெரியுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஒரு இளம் பெண் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்... அப்போது, அவள் மேல் யாரோ ஏறி அமர்ந்து அழுத்துவது போல் உணர்ந்தாள். உடனே அவள் எழ முயற்சி செய்கிறாள்...
ஆனால்.. முடியவில்லை.... கண்களை திறந்து, கை, கால்களை அசைக்க முயற்சி செய்கிறாள்... முடியவில்லை... அவள் கத்தி கூச்சல் போட்டும் யாரும் கேட்கவில்லை... அந்த நேரத்தில் அவளுக்கு பயம் அதிகரிக்கிறது.
கண்களை திறந்து பார்க்கையில், கருப்பா... ஏதோ ஒரு ஆவி அவள் மேல் அமர்ந்து அழுத்திக்கொண்டிருக்கிறது... ஆனால், கொஞ்சம் நேரத்தில் அவள் தூக்கம் கலைந்து திடுக்கிட்டு எழுந்து அமர்கிறாள்.
அவளுடைய பதற்றத்தைப் பார்த்த அவள் அம்மா... என்னம்மா... ஏதோ ஒரு மாதிரியா... இருக்க... அப்போது அவள்... அம்மா... என்னை யாரோ அழுத்தினாங்க.. பார்க்க ரொம்ப கருப்பா இருந்தது... எனக்கு பயமா இருந்ததும்மா... என்று அவள் சொல்ல...
உடனே அவள் அம்மா பயப்படாதே... ஏதாவது காத்து, கருப்பு அண்டிருக்கும்... நான் உன்னை கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போறேன்... என்று சொல்லி அவளின் பதற்றத்தை குறைக்கிறார்...
மருத்துவர்கள் சொல்வது என்ன?
இந்த கதையில் அப்பெண்ணுக்கு நடந்தது... நிஜத்தில் நமக்கு கூட இப்படி நடந்திருக்கும்... நாம் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று நம்மை அழுத்துவதுபோல் உணர்ந்திருப்போம்... மேலே இருந்து கீழே விழுவது போல் உணர்ந்திருப்போம்... இது பேய்யா...? ஏன் இப்படி நடந்தது...? என்று நாம் குழம்பி கொண்டிருப்போம்...
இதைத்தான் ‘அமுக்குவான் பேய்’ என்று சொல்வார்கள்...
ஆனால், உண்மை என்னவென்றால், இது பேய்யும் இல்ல... பிசாசும் இல்ல... இதை தூக்க பக்கவாதம் கோளாறு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்..
அதாவது, நீங்கள் தூங்கும் அந்த அறையில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கலாம். ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருக்கலாம். ஆக்சிஜன் அளவு குறையும் போது, நம் உடலில் உள்ள தசைகளில் ரத்த ஓட்டம் குறையும்.
அப்போது, நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நமது தசைகள் விழிப்பாக இல்லாமல் தளர்வுடன் இருக்கும். சில சமயம் நம் மூளை விழித்துக்கொண்ட பிறகும், உங்கள் உடல் தூங்கிக் கொண்டிருக்கும். அப்போது நம்மால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது.
இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் ஏற்படுகிறது. தசைகள் தளர்வாக இருக்கும்போது, மூளை மட்டும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அப்போது, மூளை இடும் கட்டளையை உடல் தசைகள் ஏற்காது. அதனால் இப்படி ஒரு உணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், ஒரு நபர் மன இறுக்கத்தில் இருக்கும்போதோ அல்லது பயந்து கொண்டே தூங்க செல்லும்போதோ இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற நிகழ்வு ஒரு மனிதருக்கு எப்போவாவது நிகழ்ந்தால் பரவாயில்லை.
ஆனால், அடிக்கடி நிகழ்ந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். பேயும் இல்ல.. பிசாசும் இல்ல. இனி இதுபோல் நடந்தால் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை... புரிந்ததா...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |