தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கூச்சல் போட்டு எழுப்பிய பூனை! பின்பு காத்திருந்த அதிர்ச்சி
அதிகாலையில் பூனை ஒன்று உரிமையாளரின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் மருத்துவர்களை மட்டுமின்றி இந்த செய்தியை கேள்விப்பட்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிகாலையில் சத்தம் போட்டு எழுப்பிய பூனை
Nottinghamshire பகுதியை அடுத்த Stapleford என்னும் இடத்தை சேர்ந்தவர் Sam Felstead(42). சமீபத்தில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அதிகாலையில் நடந்த சம்பவம் ஒன்று கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாம் அயர்ந்து தூகங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் அவரது வளர்ப்பு பூனை பில்லி, சாம் மீது அமர்ந்து சத்தம் போட்டு எழுப்பியுள்ளது.
பூனையின் சத்தத்தைக் கேட்டு கண்விழித்த சாமிற்கு உடலில் பயங்கர வலி ஏற்பட்ட நிலையில், தன்னால் எழும்பமுடியவில்லை என்பதை உணர்ந்த அவர் உடனே தனது தாயை அழைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாம்க்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டதால், அவரது தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சாமை பரிசோதித்த மருத்துவர்கள் அதிகாலை வேலை சிறிய மாரடைப்ப ஏற்பட்டுள்ளதாகவும், சில நிமிடங்கள் தாமதமாக மருந்துவமனை வந்திருந்தாலும், சாமின் உயிருக்கு மிகவும் ஆபத்தாக அமைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
சாம் கூறியது என்ன?
குறித்த சம்பவம் குறித்து சாம் கூறுகையில், "அதிகாலையில் எனது உடலில் மீது ஏறி இருந்த பில்லி, மியாவ் மியாவ் என கத்தியது, எனது காதில் பயங்கரமாக ஒலித்தது.
இதற்கு முன்பு தூங்கிக் கொண்டிருக்கும் என்னிடம் ஒருமுறை கூட பில்லி இப்படி செய்ததில்லை. ஒருவேளை பில்லி என்னை எழுப்பாமல் போயிருந்தால், நிச்சயம் என்னை அது ஒரு மோசமான நிலைமைக்கு கொண்டு சேர்த்திருக்கும்" என சாம் கூறி உள்ளார்.
பொதுவாகவே பில்லி சாமின் தாயாரிடம் தான் அதிக நேரம் செலவிடும் என்றும், சம்பவத்தன்று தன்னிடம் வந்து தன் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், அவரது உரிமையாளாரான சாமின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டதை உணர்ந்து, கவலையில் பூனை அப்படி செய்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.