இந்த பொடியை ஒரு ஸ்பூன் பாலில் கலந்துகுடித்தால் போதும்! அதுக்கு அப்புறம் பாருங்க நடக்கும் அதிசயத்தை
இன்றைய நவீன உலகில் தரமற்ற உணவு காய்கறிகளால் பல விதமான நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனையே நாடுகிறோம். சரியான உணவு முறைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நமது வழக்கமாகவே மாறிவிட்டது.
இதனிடையே, நரம்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அமுக்கராங்கிழங்கை கொண்டு எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். அதன்படி காலை மாலை வேளையில் டீ மற்றும் காபிக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் அமுக்கராங்கிழங்கு பொடியில் மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து பசும்பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.
இதனால் இந்த பிரச்சினை குறையும். உடலுக்கு வலிமையும் கிடைக்கும். மேலும், இந்த பொடியை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் போகும். உடல் சருமம் பொலிவு அடையும். ஆயுள் நீடிக்கும். வளரும் பிள்ளைகளுக்கு 2 சிட்டிகை அளவுக்கு நெய்யில் கலந்து கொடுக்கலாம்.
பெரியவர்கள் அரை டீஸ்பூன் அளவு நெய்யில் குழைத்து சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு தேனில் கலந்து கொடுத்தால் பசியின்மை பிரச்சினை நீங்கும்.
முக்கியமாக உடல் ஆரோக்கியத்துக்கு வலு கொடுக்கும் சத்து கஞ்சி தயாரிப்பில் அமுக்கராங்கிழங்கு பொடி சேர்த்து குடித்து வந்தால் இழந்த இளமை மீண்டும் திரும்பும்.
ஆண்களுக்கு பிரத்யேகமான அமுக்கராங்சூரண தயாரிப்பும் உண்டு.
இந்த அமுக்கராங்கிழங்கை தான் அஸ்வகந்தா என அழைக்கபடுகிறது. இவை ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.