எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன்
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளர்களான அமுதவாணன் மற்றும் ஜனனி இருவருக்கும் இடையிலான ரிலேஷன்ஷிப் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் எனக் கூறி ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பானது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் வீட்டிலுள்ள முக்கால்வாசி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
ஜனனி எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை வெளியேற்றப்பட்டார் . இவர் வெளியேறிய பின்னர் இவர் அமுதவாணன் மிகவும் கஷ்டப்பட்டு அழுது புலம்பியுள்ளார்.
அமுதவாணன் பேட்டியில் கூறிய விடயங்கள்
இந்த காரணத்தை பலர் கேட்ட போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலைக் கொடுத்தார். இந்த நிலையில் அதே கேள்வியை ப்ரீஸ் டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த அமுதவாணனின் மனைவியும் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சுமார் 13 இலட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய அமுதவாணன் சமீபத்தில் ஒரு யுடியுப் சேனலிலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.
அதில்,“ எனக்கும் ஜனனிக்கு இடையிலுள்ள ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தான் தெரியும். அவள் செய்யும் முகப்பாவனைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், கியூட்டாகவும் இருக்கும். அவருடன் வெளியில் சென்றதும் பேசினேன். ஜனனியின் தம்பிக்கூட நன்றி என கூறினார்” எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் “ உங்களுக்கு ஜனனிக்கும் ஒரு உறவும் இல்லையென்றால் ஏன் அழுதீர்கள் என கேட்டுள்ளார்கள்.
𝐀𝐦𝐮𝐭𝐡𝐚𝐯𝐚𝐧𝐚𝐧 𝐚𝐛𝐨𝐮𝐭 #𝐉𝐚𝐧𝐚𝐧𝐲 👏👌#Azeem #BiggBossTamil #biggbosstamilseason6 #BiggBossTamil6 #Vikraman #MakkalNayaganAzeem pic.twitter.com/TyGSSn5iUc
— 𝐌ᴇɴᴀɴ 𝐊ʀɪsʜɴᴀ (@mena_Krsna) February 1, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.