Amoeba Disease: மூளையை பாதிக்கும் அமீபா தற்காக்கும் வழிகள் எவை? மருத்துவ விளக்கம்
பொதுவாக மனிதனின் வாழ்க்கைமுறையால் நோய்கள் வருகின்றன. இந்த நோய்கள் வருவதற்கு முழுக்காரணம் நமது அன்றாட பழக்கவழக்கம் தான்.
எப்போதும் நம்மை சுற்றியுள்ள சூழலையும் சுத்தமாக வதை்திருப்பது மிகவும் முக்கியம். சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தால் மட்டுமே நம்மால் நோய் நொடியின்றி உயிர்வாழ முடியும்.
அந்த வகையில் தற்போத குழந்தைகளை பாதிக்கும் அமீபா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றது இந்த தொற்றில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றது. இத் அறிகுறிகள் மற்றும் பாதுகாக்கும் முறைகளை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
அமீபா
அமீபா எனும் உயிரினம் மூளையை தின்னும் உணிரினம் என கூறப்படுகின்றது. இந்த உயிரினம் வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை ஆகும். இது தவிர ஏரி, ஆறு, நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரினம்.
இந்த இடங்களில் மூழ்கிக்குளிக்கும் பழக்கம் இருக்ம் நபர்ளுக்கு இந்த தொற்குறு பரவுகின்றது. இந்த நுண்ணங்கி மூக்கு வழியாக உடலுக்குள் செல்லும். இதன் பின்னர் இது கொஞ்சம் கொஞ்சமாக மூக்கிலிருந்து மூளைப்குதிக்கு செல்லும்.அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
இது தவிர மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு நீர் பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று ஏற்படும் என கூறப்படுகின்றது.
இது ஒரு தொற்றாத நோய் இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அது மற்றவர்களுக்கு பரவாது. இந்த நோயால் ஒவ்வொரு நாட்டிலும் மாதத்திற்கு 10 போர் குறைந்தபட்சமாக பாதிக்கப்படகின்றனர்.
அறிகுறிகள்
இந்த தொற்று ஏற்பட்ட முதல் அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது. எந்த மருந்து குடித்தாலும் இந்த காய்ச்சல் இறங்காது. இப்படி அறிகுறி இருந்நதால் ரத்தப்ரிசோதனை செய்வது சிறந்ததாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விடுகிறார்கள்.
இந்த நோய் வந்த ஆரம்ப பகுதியில் அதிகமான தலைவலி வரும். இதன்பின்னர் உணவு எடுத்தாலும் அதை உண்ண முடியாது. குமட்டல் வாந்தி வந்துகொண்டே இருக்கும்.இந்த அமீபா வேகமாக வளரக்மூடியது.
இது தொடங்கிய 1 முதல் 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகின்றனர். இந்த தொற்று வந்து ஐந்து நாட்களில் கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது.
உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.
இதில் ஒரு சோகமான விஷயம் இதை சோதனை மூலமும் கண்டறிவது கடினம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்ததன் பின்னரே இந்த நோய் கண்டறிய முடிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |