பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க.. கெட்ட கொலஸ்ட்ரால் சீக்கிரம் குறைஞ்சிடும்
ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு பூண்டை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் மக்கள் பயங்கர பிஸியாக செயல்பட்டு வருகின்றனர். ஆதலால் உணவிற்கு அதிக கவனம் கொடுப்பதில் தவறிவிடுகின்றனர். அதிலும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தினால் உடம்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய ஆரோக்கியத்தை பாதிக்கின்றது.
ஆதலால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவுகட்டுப்பாடு அவசியம் என்றாலும், நாம் அன்றாடம் சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான பூண்டு கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகுகின்றது.
பூண்டு
மூலிமை மசாலா பொருட்களில் ஒன்றான பூண்டு ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகும். பூண்டின் வாசனை உணவில் சுவையை அதிகரிப்பதுடன், அசைவ உணவிற்கு இன்னும் சுவையை கூட்டுகின்றது. சமையலுக்கு மட்டுமின்றி மருத்துவத்திற்கு இது பெரிதும் பயன்படுகின்றது.
பூண்டில் மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பூண்டில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டை நாம் சில முறைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டை எவ்வாறு எடுத்துக்கொள்வது?
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு பல் பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
மேலும் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு பூண்டு டீ-யாகவும் பருகலாம். ஒரு கப் தண்ணீரில் 4 பல் பூண்டு பற்களை நசுக்கி போட்டு கொதிக்க விடவும். இதில் இரட்டு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியும் சேர்த்துகொள்ளவும். தேவையெனில் சிறிது எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளலாம்.
image: canva
பச்சையாக சாப்பிட பிடிக்கவில்லை என்று நினைப்பவர்கள், அடுப்பில் ஃபேன் ஒன்றினை வைத்து அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி, ஒரு கைப்பிடி தோல் உரித்த பூண்டை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி சாப்பிடவும். இவ்வாறு சாப்பிட்டாலும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.
image: adobe stock
தினமும் சமைக்கும் உணவுகளில் பூண்டை கட்டாயம் சேர்த்துக் கொள்வதால், ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்க முடியும்.
கண்ணாடி பாட்டிலில் தோல் உரித்த பூண்டும், அதனுடன் தேன் அதிகமாக சேர்த்து ஊற வைத்த அதனை தினமும் காலை வெறும்வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |