Foreign மாப்ள தான் வேணுமாம்... காரணத்தை கேட்டு ஆடிப்போன தொகுப்பாளர்! வைரல் வீடியோ
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிப்பரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் திருமணத்தில் யார் கை ஓங்கி இருக்கிறது?மணமகன் வீட்டார் Vs மணமகள் வீட்டார் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில் மணமகள் வீட்டார் சார்ப்பில் பங்கேற்ற பெண்ணை பெற்ற தாய் ஒருவர் மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என உறுதியாக குறிப்பிட்டதுடன் அதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் அரங்கத்தையே வியப்பில் ஆழ்த்தியது.

குறித்த சுவாரஸ்யமான தருணத்தின் காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
தமிழா தமிழா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இந்த வாரம் இடம்பெற்ற நிகழ்ச்சியின் சில காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |