கோடிக்கணக்கில் அமிதாப் பச்சனுக்கு சொத்து: 3000 ரூபாய்க்கு வேலைக்கு சென்ற மகள்
பள்ளி ஆசிரியராக 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் வேலை செய்திருக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன், பிரபல தொழிலதிபர் நந்தா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் ஸ்வேதா பச்சன் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஸ்வேதா பச்சனின் மகள் நவ்யா நவேலி நந்தா நடித்து வரும் 'வாட் தி ஹெல் நவ்யா' என்ற பாட்காஸ்ட் எபிசோடில், தனது தாயார் மற்றும் பாட்டியான ஜெயா பச்சனையும் பங்கேற்கச் செய்துள்ளார்.
பணத்துடனான உறவு மிகவும் மோசமானது
அதில், பெண்களின் நிதி சுதந்திரம் உள்ளிட்டவை குறித்து பல கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
பணத்துடனான எனது உறவு மிகவும் மோசமானது என்றும் நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில், உணவு வாங்குவதற்காக எனது சகோதரனிடம் கடன் வாங்கினேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் படிக்கும்போது நிதி நிர்வாகம் பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
எனக்குத் திருமணமாகி, நான் டெல்லியில் இருந்தபோது, ஒரு மழலையர் பள்ளியில் உதவி ஆசிரியையாக வேலை செய்தேன்.
3 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை
அப்போது எனக்கு மாதச்சம்பளமாக 3 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. நான் அதை வங்கியில் சேமித்து வைத்தேன் என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
கோடிக்கணக்கில் செத்து சேர்த்து வைத்திருக்கும் பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சனுடைய மகளுக்கு இப்படி ஒரு நிலை வந்ததா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த விடயம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.