தங்கல் படத்தில் ஆமீர் கானின் மகளாக நடித்த 19 வயது இளம் நடிகை மரணம்.. காரணம் என்ன?
ஆமீர் கானின் தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் உடல்நலக் குறைவால் 19 வயதில் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆம் ஆண்டு வெளியான தங்கள் திரைப்படத்தில் பபிதா குமாரி போகத் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனங்களில் இன்று வரை நீங்காத இடம் பிடித்தவர் தான் சுஹானி பட்னாகர்.
இந்த படத்திற்கு பின்னர் பல விளம்பரங்களில் நடித்த இவர் கல்வியில் நாட்டம் செலுத்தி நடிப்பில் இருந்து சில காலம் விலகி இருந்த நிலையில் ஒரு விபத்தில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவுக்குப் பிறகு, மருத்துவ ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பெப்ரவரி 7ஆம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 16 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என்று கூறப்பட்டுள்ளது. குறித்த தகவல் திரையுலத்ததை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |