மோதிரம் மாற்றி கொண்ட பாவனி - அமீர் ஜோடி! விரைவில் கெட்டி மேளம்...திருமணம் எப்போது தெரியுமா?
பிக் பாஸ் அமீரின் காதலை பாவனி உறுதி செய்துள்ளார்.
பிபி ஜோடிகள் ஷோவில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரொமோ வெளியாகி வைரலாகி இருக்கிறது.
அதில் அமீர் பாவனியிடம் மீண்டும் ப்ரொபோஸ் செய்கிறார். ஆனால் அந்த மோதிரத்தை பாவனி வாங்கினாரா இல்லையா என்பது ப்ரோமோவில் காட்டப்படவில்லை.
ஆனால் தற்போது பாவனி கையில் மோதிரத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை அமீர் வெளியிட்டு இருக்கிறார். அந்த ப்ரோமோவில் பாவனியில் வலதுகை விரலில் மோதிரம் இல்லை, ஆனால் போட்டோவில் இருக்கிறது. அதனால் அவர்கள் இருவரும் காதலை உறுதி செய்துவிட்டது தெரியவந்திருக்கிறது.
திருமணம் எப்போது?
இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்து கூறி வருகின்றனர்.
அது மட்டும் இல்லை, திருமணம் எப்போ என்று அமீரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.