குப்பையில் தூக்கி வீசும் முட்டை ஓட்டில் தேன் துளிகளை சேர்த்து முகத்துக்கு தடவுங்கள்! பேரழகியாக ஜொலிக்கலாம்
நாம் குப்பையில் வீசும் முட்டையின் ஓடானது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. இதனால் சருமத்தின் அடியில் உள்ள தெளிவான மென்மையான சரும வெளிப்படுகிறது.
முட்டை ஓட்டில் 750 முதல் 800 மில்லி கிராம் வரை கால்சியம் சத்து உள்ளது. இது புதிய சருத செல்களை மீளுருவாக்கம் செய்ய ஊக்குவிக்கிறது. உங்கள் சருமத்தை இது சமன் செய்கிறது.
மேலும் உங்கள் சருமத்தை உறுதியாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
இத்தகைய முட்டை ஓட்டுடன் தேனை கலந்து எப்படி பயன் படுத்தலாம் என்று பார்க்கலாம். தேன் சிறந்த சரும எக்ஸ்போலியேட்டர் ஆகும்.
இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் உள்ள அசுத்தங்கள், நச்சுக்கள் ஆகியவற்றை நீக்குகிறது.
இந்நிலையில் முட்டை ஓடு மற்றும் தேன் கலவையை நாம் முகத்தில் பயன்படுத்தும்போது அவை முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை நீக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்
ஒரு முட்டை ஓடு
2 டீஸ்பூன் தேன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முட்டையை நொறுக்கி அதனுடன் தேனை கலந்து கலவையாக்கவும்
அதை முகமெங்கும் தடவி உலர வைக்கவும்
பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்
வாரத்திற்கு இருமுறை இந்த கலவையை பயன்படுத்தலாம்