மீனின் வயிற்றைப் கிழித்து கருவை எடுத்து செயற்கையாக குஞ்சு போட வைக்கும் ஆதிசயம்...மிரள வைத்த தொழில்நுட்பம்!
மீனின் வயிற்றை பிரித்து அதிலிருந்து முட்டைகளை எடுத்து செயற்கையாக குஞ்சுகளை உருவாக்கும் அதிசயம் எமது தொழிநுட்ப உலகில் சாதாரணமாகி விட்டது இன்று.
பொதுவாக கோழி, ஆடு, மாடு என வளர்ப்பவர்கள் பலரைப் பார்த்திருப்போம்.
ஆனால் மீன் அனைவரும் வளர்க்க முடியாது. காரணம், கோழி, ஆடு, மாடு எல்லாம் வீட்டுப் புழக்கடையில் இடம் இருந்தாலே வளர்த்து விடலாம்.
ஆனால் மீன் அப்படி அல்ல. அது தண்ணீரில் வாழும் உயிரி என்பதால் மீன் வளர்க்க சிரமம்.
நாம் பொதுவாக மீன்கள் ஒன்றுடன் ஒன்று கூடி, மகிழ்ந்து அதன் மூலம் குஞ்சுகள் பொறிப்பதைத் தான் பார்த்திருப்போம். இந்தப் பண்ணையில் பெண் மீனின் வயிற்றைப் கிழித்து கரு முட்டைகளை வெளியே எடுக்கின்றனர்.
தொடர்ந்து அந்த மீனை மீண்டும் தண்ணீரில் விட்டு,விட்டு தொடர்ந்து ஒரு ஆண் மீனைப் பிடித்து அதன் விந்துவை எடுக்கின்றனர்.
இரண்டையும் ஒரே பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, அதனோடு கொஞ்சம் தண்ணீரும் கலந்து, நன்றாக கலக்கிவிடுகின்றனர். தொடர்ந்து இந்தக் கலவையை நன்கு இறுக மூடிய ஒரு குடுவையில் வைத்து, இரு நாள்களுக்குப் பின்பு திறந்தால் அதில் மீன் குஞ்சுகளாக இருக்கின்றன. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். இதற்கு முன்பு நீங்கள் இப்படி ஒரு காட்சியைப் பார்த்திருக்கவே மாட்டீர்கள்.