BSNL அசத்தல் ரீசார்ஜ் திட்டம்: வெறும் ரூ.300 போதும்... யாருக்கு எது சிறந்தது?
ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் ப்ரபெய்ட் திட்டங்களுக்கான விலை உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது ப்ரீபெய்ட் கட்டணங்களை அதிகரிக்கவில்லை.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆகவே தனியார் டெலிகாம் பயனர்கள் தற்போது பிஎஸ்என்எல் சிம்களை அதிகமாக துகர்வு செய்ய ஆரம்பித்துவிட்டனர். மேலும் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம், ரூ.228, ரூ.247, ரூ.269, ரூ.298 மற்றும் ரூ.299 போன்ற விலைகளில் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களின் மூலம் பயனர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகின்றது.
அந்த வகையில் ரூ.300 கீழ் பிஎஸ்என்எல் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு மாதத்திற்கு தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.எனவே இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 56 ஜிபி வரை டேட்டா கிடைக்கும்.
இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அரினா கேம்ஸ் (Arena Games) உள்ளிட்ட பல நன்மைகளை இந்த திட்டமானது வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்களுக்கு மொத்தம் 50ஜிபி டேட்டாவை பெற முடியும். அதுமட்டுமன்றி காலிங், தினமும் 100 SMS மற்றும் டாக் வேல்யூ ரூ.10 உள்ளிட்ட பல நன்மைகளையும் கொடுக்கின்றது.
பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டாவை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS, Arena மொபைல் கேமிங் சர்வீஸ், BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல் மற்றும் ஹார்டி மொபைல் சர்வீஸ் உள்ளிட்ட பல நன்மைகளை அளிக்கின்றது.
பிஎஸ்என்எல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 51 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 1ஜிபி டேட்டாவை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் மொத்தம் 52ஜிபி டேட்டா கிடைக்கின்றது.
மேலும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 SMS மற்றும் டாக் வேல்யூ ரூ.10 உள்ளிட்ட பல நன்மைகளையும் பெற்றுக்கொடுக்கின்றது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இன்டர்நெட் ஸ்பீட் 40 Kbpsஆக குறைவடைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |