ரத்த சர்க்கரையை சட்டுன்னு குறைக்கும் மொச்சை கொட்டை கார குழம்பு! எப்படி செய்வது?
பொதுவாகவே காய்கறிகள் மற்றும் தானியங்களில் அதிகளவில் ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் நிரம்பியிருக்கின்றது.
அந்தவகையில், பெரும்பாலானவர்கள் தவிர்த்து விடும் மொச்சை கொட்டையில், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.

இதில், அதிகளவு நார்சத்து உள்ளதால் இது உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மொச்சை கொட்டையை டயட்டில் சேர்த்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மொச்சை கொட்டையில் செரிந்து காணப்படும் மெக்னீசியம், கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்து வலுப்படுத்த உதவுகிறது. இதில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் இரத்த அணுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்கிறது.

வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கும் மொச்சை கொட்டை தீர்வாக அமைகிறது. அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, பொட்டாசியம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் மலச்சிக்கலுக்கம் தீர்வு கொடுக்கின்றது.
குறிப்பாக சர்க்கரை நோய்யாளிகளுக்கு மொச்சை கொட்டை ஒரு வரப்பிரசாதம் என்று தான் கூறவேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சமநிலையில் வைக்க உதவுகிறது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மொச்சை கொட்டையில், பிடிக்காதவர்களும் கூட விரும்பி சாப்பிடும் வகையில், நாவூரும் சுவையில் காரகுழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்கலாம்.

தேவையான பொருட்கள்
மொச்சைக்கொட்டை - 1 கப்
எண்ணெய் - 4 மேகை்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
பூண்டு - 6 பல்
தக்காளி - 1 நறுக்கியது
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
தண்ணீர் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
நாட்டு சர்க்கரை -தேவையான அளவு

வறுத்து அரைக்க
சோம்பு - 2 தே.கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 நறுக்கியது
பூண்டு - 4 பல்
துருவிய தேங்காய் - ½ கப்

செய்முறை
முதலில் மொச்சைக்கொட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரில் எடுத்துக்கொண்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, 6 விசில் வரும் வரை வேக வைத்து, மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும். பின்னர் இறக்கி ஆறவிடவேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு ,வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து துருவிய தேங்காய் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வரையில் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி, மிருதுவாகும் வரை மென்மையான விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கடுகு வெடிக்கும் வரையில் காத்திருக்க வேண்டும்.
கடுகு பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வந்ததும் நறுக்கிய தக்காளி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் மல்லித்தூளை சேர்க்கவும், அதன்பின் மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும். மசாலா பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி இறுதியாக உப்பு சரிபார்த்து சர்க்கரை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்தால் அவ்வளவு தான் மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |