உணவில் அதிக உப்பு எடுத்துக்கொள்பவரா நீங்க? இந்த ஆபத்து உறுதி
பொதுவாகவே உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக்கொண்டால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
உண்மையிலேயே உப்பை கட்டுப்படுத்துவது அல்லது தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்குமா? என்று கேள்வி எழுப்பினால் பலருக்கு இது குறித்த தெளிவாக கருத்து இருக்காது.

ஒரு காலத்தில் உணவின் அவசியமான சுவையூட்டியாக இருந்த உப்பு, இன்று பலரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் வீக்கம் என பல்வேறு பிரச்சனைகளுக்கும் உப்பே முக்கிய காரணமாக இருக்கிறது என்கிற பொதுவான நம்பிக்கையும் நிலவுகிறது.

அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என்பது தொடர்பிலான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக உப்பு ஏன் ஆபத்து?
நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை வலுவாக பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இன்னும் குறைவாகவே சோடியம் தேவைப்படும். உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறுநீரகத்துக்கு அதிக பங்கு காணப்படுகின்றது. உப்பு அதிகமாக எடுத்துக்க்கொண்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
நம்ட உடலில் ‘ரெனின் ஆஞ்சியோடென்சின் ஆல்டோஸ்டீரான்என்று ஒரு அமைப்பு காணப்படுகின்றது. இதுதான் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது.
இதில் ரெனின், ஆஞ்சியோடென்சின் ஆகிய இரண்டும் உடலில் ரத்தக்குழாய்களை சுருங்கி விரியச்செய்கின்றன.

இவை சரியாகச் சுரந்தால், ரத்தக் குழாய்களும் சரியாகவே சுருங்கி விரியும். அதிகமாகச் சுரந்தால், ரத்தக் குழாய்கள் ஒரேயடியாக சுருங்கிவிடும். இப்படி சுருங்கிப் போன ரத்தக்குழாய் தான் ரத்த அழுத்தம் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
உணவில் உப்பு அதிகமானால், அதிலுள்ள சோடியமானது, ரெனின், ஆஞ்சியோடென்சின் சுரப்பதை அதிகப்படுத்திவிடும். இதனால் ரத்தக்குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கி ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

ஏற்கனவே இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு சோடியம், திரவத் தேக்கத்தை அதிகரித்து, சுவாசப் பாதை நெரிசல், மூச்சுத்திணறல், போன்ற அபாயாரமாக பாதிப்பையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் மாரடைப்புக்கும் அதிக உப்பு நுகர்வு காரணகிவிடுகின்றது.
கல்லீரல் சிரோசிஸ் மற்றும் போர்டல் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக உப்பு எடுத்துக்கொள்வது, வயிற்றில் நீர் கோர்ப்பு ஏற்படுவதற்கு நேரடியாகக் காரணமாகிறது.
மேலும் வயது அதிகரிக்கும் போது, இரத்த நாளங்கள் சோடியத்தைச் சமநிலைப்படுத்தும் திறனை இழக்கின்றன. இதனால், உப்பை அதிகளில் எடுத்துக்கொள்ளும் போது, ரத்த அழுத்தம்,இயத பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு உட்பட பல்வேறு ஆரோக்கிய பிரச்சிகைகள் ஏற்பட முக்கிய காரமாக இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |