poondu thokku : ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வாகும் பூண்டு தொக்கு!
பொதுவாகவே பூண்டு இந்திய உணவு வகைகளின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றால் மிகையாகாது.
சாதாரணமாக குழம்புகளில் ஆரம்பித்து பிரியாணி வரையிலும் பூண்டு சேர்ப்பது ஒவ்வொரு உணவிற்கும் மாயாஜால சுவையைத் கொடுக்கின்றது.

இதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவை காரணமாக அதனை தவிர்து சமையல் செய்வதை பெரும்பாலானவர்கள் விரும்புவது கிடையாது.சுவை, மணத்திற்கு மாத்திரமன்றி அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கும் பூண்டு பிரபல்யமானது தான்.
உடலின் இரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்க உதவும் பூண்டை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதய நோய்களைத் தடுப்பது முதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது வரை, பூண்டு பல்வேறு வகையிலும் பூண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் ஒருசேர கொண்டிருக்கும் பூண்டில் அசத்தல் சுவையில் எவ்வாறு பூண்டு தொக்கு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தோல் உரிக்கப்பட்ட பூண்டு - 250 கிராம்
சிவப்பு மிளகாய் -4
கடுகு -1 தே.கரண்டி
வெந்தயம் -½ தே.கரண்டி
மஞ்சள் தூள் -½ தே.கரண்டி
மிளகாய்த்தூள் -½ தே.கரண்டி
புளிக்கரைசல் -2 தே.கரண்டி
எண்ணெய் -2 தே.கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் வெந்தயத்தை சேர்த்து தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தோல் நீக்கிய பூண்டினை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில் சிவப்பு மிளகாயை வெந்நீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள எடுத்து, ஒரு மிக்ஸியில் போட்டு பேஸ்ட் பதத்துக்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்த அரைத்த பேஸ்ட்டையும் பூண்டுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிய பின்னர், புளிக்கரைசல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையாக சுவையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளி கொடுக்கும் பூண்டு தொக்கு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |