நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும் சமந்தா! புகைப்படத்தை வெளியிட்டு கொடுத்த ஷாக்
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவின் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
காதல் திருமணம்
நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாகசைதன்யாவுக்கும் கடந்த 2017ம் ஆண்டு கோவாவில் திருமணம் நடைபெற்றது. 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் கடந்தாண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
விவாகரத்திற்கு பின்பு தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கவர்ச்சி புகைப்படங்களையும் சமந்தா வெளியிட்டு வருகின்றார்.
நாக சைதன்யா இந்தியில் நடித்துள்ள லால் சிங் சட்டா திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், சமந்தாவுடன் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை! அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?
மீண்டும் ஒன்று சேர்வார்களா?
விவாகரத்திற்கு பின்பு சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடுடன் இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். மீண்டும் காதல் கணவருடன் சேர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கூறிவந்த நிலையில், நாகசைதன்யாவை பின் தொடர்வதை நிறுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவின் போட்டோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இவர்கள் இருவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான மஜிலி என்கிற திரைப்படம் 3 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக அந்த போட்டோவை பதிவிட்டுள்ளார் சமந்தா. அதில் நாக சைதன்யாவுடன் நடிகை சமந்தா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.