எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் வெட்கமாக இருக்கிறது... சமந்தா ஓபன் டோக்!
நடிகை சமந்தா தனது நடிப்பு குறித்து பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசிய விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் பெரிதும் படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் கூட, ரசிகர்களால் இன்றும் முன்னணி நடிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றார்.
விரைவில் மிகப்பெரிய படங்களுடன் மாஸ் கம் பேக் கொடுக்கப்போகிறார் என தகவல்கள்வெளியாகியுள்ளது.
அட்லீ – அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
மேலும் ராம் சரண் – சுகுமார் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திலும் சமந்தா நடிக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
சமந்தா சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படம் எதிர்வரும் மே மாதம் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த நேர்காணலில் சமந்தா குறிப்பிடுகையில், “நான் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களை இப்போது நான் பார்த்தாலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என யோசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |