விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் கமிட்டான அமலாபால்... புதிய காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
அமலாபால் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக அவரது காதலர் சமூக வலைத்தளத்தில் காணொளியாக வெளியிட்ட காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.
அமலா பால்
தமிழில் சிந்து சமவெளி என்றத் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை அமலாபால். அவர் நடித்த முதல் திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை அதனைத் தொடர்ந்து விக்ராத்துடன் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு வர தொடர்ந்து தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து அதிக ரசிகர் படையைக் கொண்டிருந்தார்.
பின்னர் தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், அத்திரைப்பட இயக்குனரான ஏ.எல்.விஜய்யை 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் 2017ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.
இரண்டாம் திருமணம்
விவாகரத்திற்குப் பிறகு அதிக கவர்ச்சிக் காட்டி நடித்து வந்த அமலாபால், அடுத்தடுத்து ஊர் சுற்றும் பல புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், அமலாபால் இன்று 32ஆவது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு குட்நியூஸ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அதாவது அவர் தற்போது திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார். இதனை அவரின் காதலரான ஜெகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |