காளிதாஸ் ஜெயராம் திருமணம்... வாழ்த்து கூறி அமலா பால் போட்ட பதிவு
நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் பிரபல மாடல் தாரிணியின் திருமணத்துக்கு வாழ்த்து கூறி நடிகை அமலா பால் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காளிதாஸ் ஜெயராம்
நடிகர் ஜெயராம் -நடிகை பார்வதி ஆகியோரது மகனான காளிதாஸ் ஜெயராம் மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்திருநட்தார். தழிழில் விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் தொடரில் காளிதாஸ் நடித்த திருநங்கை கதாபாத்திரம் பாரட்டுக்களை குவித்தது.
காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரிணி காளிங்கராயனை காதலித்து வந்தார். அண்மையில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் குருவாயூர் கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. குறித்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகை அமலா பால் இந்த தம்பதியினரை வாழ்த்தி தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |