முதலில் baby அடுத்து தான் babe... வைரலாகும் அமலாபாலின் புதிய பதிவு!
நடிகை அமலா பால் முதலில் baby அடுத்து தான் babe என பதிவிட்டு தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அமலா பால்
இந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் மைனா திரைப்படம் தான் அமலா பாலுக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. இது அவரின் அடையாளமாகவே மாறியது என்று சொல்லலாம்.
அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.
இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் இவர்கள் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
அதனை தொடர்ந்து அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.
கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தை இருக்கின்றார்.
தற்போது சினிமாவை ஓரங்கட்டிவிட்டு கணவன் மற்றும் குழந்தையுடன் ஊர்சுற்றுவதையும் சுற்றுலா சென்று புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், அமலாபால் கணவர் வாங்கி கொடுத்த புதிய காரில் இருந்து இறங்கி அவரது குழந்தையை பெற்று கொள்ளும் காட்சியடங்கிய காணொளி ஒன்றை வெளியிட்டு, முதலில் பேபி அடுத்து தான் பேப் என குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |