நிறைமாத கர்ப்பிணி செய்ற காரியமா இது? வெளியிட்ட காணொளியை நீங்களே பாருங்க
நடிகை அமலாபால் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு அட்டகாசம் செய்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை அமலாபால்
கேரளாவில் பிறந்த நடிகை அமலா பால் மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமானார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடித்து வெளியான "மைனா" திரைப்படம் அமலாபாலுக்கு நல்ல வரவேற்பு பெற்றது.
பின்பு முன்னனி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகர்களாக வலம் வந்தார். கடந்த 2014ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்பு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்பு சில ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்த இவர், கடந்த 2023ம் ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் அமலாபால் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி ரசிகர்களால் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகின்றது.
கணவருடன் செய்யும் அன்பான அட்டகாசம், அடிக்கும் லூட்டிகளையும் பார்த்து ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |