என் எல்லாமும் நீ தானே.. கணவரின் பிறந்த நாளில் உருகிய அமலாபால்
நடிகை அமலாபால் வீட்டில் விஷேசம் என அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
அமலாபால்
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால்.
இவர் நடிப்பில் வெளியான வீரசேகரன், சிந்து சமவெளி ஆகிய படங்கள் சரியான ஒரு இடத்தை உருவாக்கி தராவிட்டாலும் அதன் பிறகு வெளியான “மைனா” திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விவாகரத்து
இந்த நிலையில் அமலாபால் 2014-ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
விவாகரத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் பல சர்ச்சைகளுக்கு முகம் கொடுத்து சினிமாவிலிருந்து முற்றாக விலகி இருந்தார். இதற்கிடையில் அவருடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கடந்த வருடம் நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றது.
பிறந்த நாள் கொண்டாட்டம்
இதற்கிடையில் தன்னுடைய இரண்டாவது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை அமலாபால் போட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
மேலும், “பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அன்பே! மகிழ்ச்சி, அன்பு, ஆரோக்கியம் மற்றும் உங்களுக்குப் பிடித்தமான அனைத்தும் நிறைந்த அற்புதமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டாக அமைய வவாழ்த்துக்கள். என் வாழ்க்கையில் உங்களைப் பெற்றதற்கு என்றென்றும் நன்றி..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பதிவை பார்த்த இணையவாசிகள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |