அதிகமாகி வரும் ஆல்யாவின் சேட்டைகள்..தீயாய் பரவும் வீடியோ பதிவு.!
இரு குழந்தைகளின் தாயான நடிகை ஆல்யா மானசா சமீபத்தில் மகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்களை ஈர்த்துள்ளது.
திருமணம்
ஆல்யா மானசா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார், இதில் இவரது செம்பா கேரக்டர் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருந்தது.
இதனைதொடர்ந்து “ராஜா ராணி” தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வீடியோ
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆல்யா மானசா, தற்போது அவளுடைய முதல் குழந்தையான ஐலாவுடன் இணைந்து சேட்டை செய்வது போன்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்க்கும் ஆல்யா மற்றும் சஞ்சீவின் ரசிகர்கள் குழந்தையை விட ஆல்யாவின் சேட்டைகள் அதிகமாகி வருகிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.