மாமியாருடன் ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க... படுவைரலாகும் காணொளி!
சீரியல் நடிகை ஆல்யா மானசா தன் மாமியாருடன் ட்ரெண்டிங் பாடலுக்கு செம கியூட்டாக நடனமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த காணொளியை பார்த்த ரசிகர்கள் மாமியார்- மருமகள் இந்தளவுக்கு நட்புடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து கண் திருஷ்டி ஏற்படப்போவதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆல்யா மானசா - சஞ்சீவ்
சின்னத்திரையில் ஜோடிகளிலேயே மிகவும் பிரபலமான ஜோடி என்றால் அது ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடியை சொல்லலாம்.
இவர்கள் இருவரும் சீரியலில் ரீல் ஜோடிகளாக நடித்து பின்பு காதலால் ரியல் ஜோடி ஆனார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

தொழில் விடயத்திலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இந்த ஜோடிக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.

இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் கணவர் குடும்பத்தையும் தன் குடும்பம் போல் ஆல்யா பராமரித்து வருகின்றார் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இவலை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஆல்யா தனது மாமியாருடன் இணைந்து ட்ரெண்டிங் பாடலுக்கு செம கியூட்டாக நடனமாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.