அம்மாவான பின்னும் குறையாத குறும்பு... மகளுடன் ஆல்யா மானசா செய்த வேலையை பாருங்க
சீரியல் நடிகை ஆல்யா மானசா தனது செல்ல மகளுடன் ஜாலியான குறும்ம்புத்தனத்துடன் ரீல்ஸ் செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான வலம் வருபவர் தான் ஆல்யா மானசா. இவரைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

காரணம் சின்ன திரையில் முன்னணி நாயகி என்ற பட்டடியலை எடுத்தால் அதில் டாப்பில் இருக்கும் நாயகியே இவர்தான்.
நடன நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் நாயகியாக களமிறங்கியவர் பின் ராஜா ராணி 2, இனியா போன்ற தொடர்களில் நடித்து தற்போது பீக்கில் இருக்கின்றார்.

ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள். படடிப்பிடிப்பில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், நயன்தாரா போல் இவரும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கு தவறுவதே கிடையாது.

இந்நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின்னரும் மாறாத குறும்புத்தனத்துடன் திகழும் ஆல்யா தனது மகளும் ரீல்ஸ் செய்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |