சினிமாவை விட்டு விலகுகிறாரா ராஷ்மிகா மந்தனா?
தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா சினிமாவை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கால்பதிப்பு
தமிழ் சினிமாவிற்கு கார்த்தி நடிப்பில் வெளியான “சுல்தான்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என பிஸியாக இருந்து வரும் ராஷ்மிகா, தற்போது விஜயுடன் நடிப்பில் “ வம்சி ” இயக்கத்தில் உருவான “ வாரிசு”திரைபடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
இவரின் யதார்த்தமான, நடிப்பாலும் வசிகரமான சிரிப்பாலும் நேஷனல் க்ரஷ் என்றும் எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.
திரையுலகை விட்டு விலகல்
இவர் சமிபத்தில் கன்னடம் திரையுலகை அவமானப்படுத்தும் வகையில், பேட்டியொன்றில் கருத்துக்களை வெளியிட்ட காரணத்தால் கன்னடத் திரையுலகம் இவர் நடிக்க தடை விதித்தது. மேலும் வாரிசு திரைப்படம் குறித்து பல பேடடிகளில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா, வாரிசு திரைப்படத்தில் குறைந்த ரோலில் மாத்திரமே வந்துச் சென்றார்.
இது குறித்து இவர் கூறியதாவது, “விஜயுடன் நடித்ததால் மட்டும் போதும்” எனக்கூறியுள்ளார். இந்நிலையில் சமிபத்தில் இவர் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டுள்ளார்.
இதன்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து அவர் தொடர்பில் சக நடிகர்கள் ட்ரோல் செய்து குறித்து சில கேள்விகள் கேட்டுள்ளார்கள். அதற்கு ராஷிமிகா மனமுடைந்து பதிலளித்துள்ளார்.
மனந்திறந்த ராஸ்மிகா
இதன்படி, "மக்களுக்கு என் உடலிலேயே பிரச்சனை இருக்கிறது. நான் வொர்க்அவுட் செய்தால் ஆண் போல இருப்பதாக சொல்கிறார்கள், வொர்க்அவுட் செய்யாவிட்டால் குண்டாக இருப்பதாக சொல்கிறார்கள்.
மேலும், நான் அதிகமாக பேசினால் க்ரிஞ்ச் என்று சொல்கிறார்கள், பேசவில்லை என்றால் திமிராக இருப்பதாக சொல்கிறார்கள். நான் மூச்சு விட்டாலும் அவர்களுக்கு பிரச்சனை நான் மூச்சு விடவில்லையென்றாலும் அவர்களுக்கு, நான் என்னதான் செய்வது?" என மிகவும் கவலையாக கூறியிருந்தார்.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறதுடன், இதனை பார்த்த ராஷ்மிகாவின் ரசிகர்கள், இவரை இவ்வளவு அசிங்கமாக கலாய்க்கும் நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இதனை தொடர்ந்து இது போன்ற ட்ரோல்கள் தொடருமாக இருந்தால் சினிமாவை விட்டு விலகுவதாகவும் தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.