குட் நியூஸ் சொன்ன ஆல்யா மானசா.. அவரே போட்ட பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்
நடிகை ஆல்யா மானசா மற்றுமொரு நற்செய்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.
ஆல்யா மானசா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.
இவர் முதன்முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இதற்கிடையில், அவருடன் இணைந்து நடித்த கார்த்திக் சஞ்சீவை காதலித்து திருமணம் கடந்த 2019-ம் ஆண்டு செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த 2022-ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.
அதே தொலைக்காட்சியில் கார்த்திக் சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகராக நடித்து வருகிறார்.
குட் நியூஸ்
சின்னத்திரை நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஆல்யா ஒரு நாளைக்கு சீரியல் நடிப்பதற்கு மாத்திரம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்ததாக கூறப்பட்டது.
சின்னத்திரை மூலம் வளர்ந்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் பல கோடி செலவில் பெரிய வீட்டை கட்டி அதில் குடியேறினர்.
சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சொந்தமாக YouTube சேனல் வைத்து நடத்தி வருகிறார்கள். அதில் குழந்தைகளுக்கு தனியாகவும் குடும்பத்திற்கு தனியாகவும் காணொளிகள் பதிவேற்றப்படுகின்றன.
அந்த வகையில், ஆல்யா மானசா புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். சீரியல் குழுவினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவருடைய சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
பதிவை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |