கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி 2 சீரியலிலிருந்து ஆல்யா மானசா விலகலா?
ராஜா ராணி 2 தொடரின் நாயகியான ஆல்யா மானசா அத்தொடரிலிருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
ராஜா ராணி சீரியல் மூலம் புகழ்பெற்ற ஆல்யா மானசா, அத்தொடரில் நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது காதல் திருமணத்துக்கு ஆல்யா வீட்டில் எதிர்ப்பு இருந்த போதும், திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார் ஆல்யா மானசா.
தற்போது அவர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார், இந்நிலையில் அதிலிருந்து விலகிவிடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, ராஜா ராணி 2 சீரியலிலிருந்து விலகுவது குறித்து யோசிக்கவில்லை, ஒரே ஒரு சந்தியா தான், அது இந்த ஆல்யா மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.
