மகன் யார் மாதிரி? குழந்தை பெற்றெடுத்த பின் ரசிகர்களிடம் பேசிய ஆல்யா
இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த பின்னர் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார் ஆல்யா மானசா.
காதல் டூ கல்யாணம்
ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா, இவர் ஒரு சிறந்த டான்ஸரும் கூட.
திருமணத்திற்கு முன் இவரை சுற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் சின்னத்திரை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
ராஜா ராணி சீசன் 1-ல் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்கு அய்லா என்ற மகள் இருக்கிறார், அவரது சுட்டித்தனமான சேட்டைகளையும் புகைப்படங்களாக, வீடியோக்களாக ஆல்யா இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.
இரண்டாவது முறை கர்ப்பம்
இந்நிலையில் ராஜா ராணி 2 தொடரில் என்ட்ரி கொடுத்த ஆல்யா மானசா 2வது முறையாக கர்ப்பமானார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் சீரியலில் நடித்து வந்த ஆல்யா, பிரசவ நேரம் நெருங்கியதும் சீரியலை விட்டு விலகினார்.
மீண்டும் தொடரில் ரீ என்ட்ரி கொடுக்கலாம் என நினைத்த போது, குழந்தையுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக அடுத்த சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போவதாக அறிவித்தார்.
ரசிகர்களுடன் உரையாடல்
சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஆல்யா மானசா, அர்ஷ் என பெயர் சூட்டியுள்ளார், இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பேசிய ஆல்யா கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதில், அர்ஷ் யார் மாதிரி இருக்கிறார்? என்ற கேள்விக்கு, தன்னைப் போன்றே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அய்லா என்றால் நிலாவெளிச்சம் என்றும், அர்ஷ் என்றால் ஹீரோ என்றும் அர்த்தமாம்.
தனக்கு அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்ததாகவும், விரைவில் மகன்- மகள் இருக்கும் வீடியோவை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவனை நயன் உருகி உருகி காதலிக்க இது தான் காரணமாம்! ஆடிப்போன ரசிகர்கள்