விக்னேஷ் சிவனை நயன் உருகி உருகி காதலிக்க இது தான் காரணமாம்! ஆடிப்போன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக திருமணம் செய்யாமல் காதலித்து ஊர் சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இதனையடுத்து, அடிக்கடி சமூக வலைத்தளத்தில், புகைப்படத்தை பதிவிடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் சேர்ந்து, ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள்.
அண்மையில், தந்தையின் பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் நயன்தாரா வெளியிட்டு இருந்தார்.
கமலை போல் ஒரு வொர்ஸ்ட் கேரக்டர நான் பார்த்ததேயில்ல.. தாடி பாலாஜி மனைவி பகீர் குற்றச்சாட்டு
நயன் காதலிக்க காரணம் என்ன?
இந்நிலையில், என்னதான் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் லவ்வில் இருந்தாலும், இதற்கு முன் பிரபுதேவா, சிம்பு, உருகி உருகி காதலித்தார்.
ஆனால் அவர்கள் விட்டு விலக, ஒரு ரசிகனாக இருந்து வந்த விக்னேஷ் சிவனை, நயன் காதலித்து தற்போது வரை அன்பாக உள்ளார்கள்.
விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா இவ்வளவு காதலுடன் இருப்பதற்கு காரணம் ஒன்றே ஒன்று மட்டும் தானாம்.
அது, எல்லா பெண்களும் விரும்புவது தனது காதலர் அல்லது வருங்கால கணவர் தன் மேல் அன்பு செலுத்துவதை போலவே தனது பெற்றோர் மீதும் அன்பாக, அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை தான்.
இந்த குணம் விக்னேஷ் சிவனிடம் இருப்பது தான் நயன்தாராவிற்கு அவரை இவ்வளவு பிடிக்க காரணமாம்.
குடும்பத்தின் பாசம்
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாராவின் அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அடிக்கடி கேரளா சென்று, தனது வருங்கால மாமனார் மற்றும் மாமியாருடன் நேரத்தை செலவிடுகிறார் விக்னேஷ் சிவன்.
இப்படி குடும்பத்தில் மீது பாசத்தை பொழியும் விக்னேஷ் சிவனை நயன் எப்பொழுதும் காதல் மழையை பொழிந்து வருகிறார்.
என்னதான் இருந்தாலும்.. விக்கி அடித்தது லக்.. என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.