கணவர் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி!
நடிகை ஆல்யா மானசா தனது கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி தற்போது பகிர்ந்துள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சஞ்சீவ்-ஆல்யா
ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.
இனியா' தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்துக் வருந்தார். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் Chamanthi என்ற தெலுங்கு தொடர் ஜீ தமிழில் ரீமேக் ஆகிறது. அதில் ஆல்யா மானசா கதாநாயகியாக களமிறங்கவுள்ளார்.
இதற்கிடையில், ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக கிளியோபட்ரா என்ற ஆல்பம் பாடலில் நடித்து இருந்தார்கள் அது அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்நிலையில் ஆல்யா தனது கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
சஞ்சீவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கயல் சீரியல் நடிகை சைத்ராவும் சர்ப்ரைஸாக கலந்துகொண்டிருக்கிறார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |