2 குழந்தைக்கு தாயான பின்னும் குறையாத அழகு: ஆல்யா மானசாவின் Beauty Secrets
30 வயதை கடந்த ஆல்யா மானசா அழகாக இருப்பதற்கான காரணங்களை எமது பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
ஆல்யா மானசா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.
இவர் முதன்முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இதற்கிடையில், அவருடன் இணைந்து நடித்த கார்த்திக் சஞ்சீவை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு செய்து கொண்டார்கள்.
திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த 2022-ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.
அதே தொலைக்காட்சியில் கார்த்திக் சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகராக நடித்து வருகிறார். சின்னத்திரை நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஆல்யா ஒரு நாளைக்கு சீரியல் நடிப்பதற்கு மாத்திரம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்ததாக கூறப்பட்டது.
சின்னத்திரை மூலம் வளர்ந்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் பல கோடி செலவில் பெரிய வீட்டை கட்டி அதில் குடியேறினர்.
அழகின் ரகசியம்
இந்த நிலையில், பரபரப்பான நடிகையாக இருந்தாலும் 30 வயதை கடந்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் ஆல்யா எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்ற கேள்வி நம்மிள் பலருக்கும் இருந்து வருகிறது.
இது குறித்து பேட்டியொன்றில் ஆல்யா பேசும் பொழுது, “ நான் அதிகமான பழங்கள் சாப்பிடுவேன். குழந்தைகள் வயிற்றில் இருக்கும் பொழுது பழங்களை ஜீஸ்ஸாக எடுத்து கொள்ளாது பழங்களாக எடுத்துக் கொள்வேன். அத்துடன் கறிவேப்பிலை போன்ற ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவேன்.
வாக்கிங் செல்வேன். உடற்பயிற்சி செய்வேன் அதே போன்று சரும பராமரிப்புக்களை தொடர்ந்து எடுத்துக் கொள்வேன். நிறைய தண்ணீர் குடிப்பேன், என்னுடைய மாமியார் ஒரு பியூடிஷன் என்பதால் அவர் கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வருகிறேன்..” என கூறியுள்ளார்.
இந்த காணொளிகளை பார்க்கும் பொழுது என்ன தான் குழந்தை, குடும்பம் என்று ஆனாலும் தன்னை பராமரித்து கொள்வது அவசியம் என குடும்ப பெண்களுக்கு உணர்த்தும் வகையில் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |