சளி தொந்தரவுகளுக்கு தீர்வளிக்கும் Sinarest New மாத்திரைகள்
குளிர்காலம், மழைக்காலம் வந்தாலே சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் தொற்றிக்கொள்ளும்.
இதனை குணப்படுத்துவதற்காக மருத்துவர்களால் Sinarest New மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
சளி தவிர தலைவலி, தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், தசை வலி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கும் மருந்தாகிறது.
மூக்கடைப்பு, கண்ணில் நீர் கோர்ப்பது, தும்மல், போன்றவற்றிற்கும் தீர்வளிக்கிறது, சளியை இலகுவாக்கி மூச்சுவிடுவதில் உள்ள சிரமத்தை போக்குகிறது, விரைவான நிவாரணத்தை பெறலாம்.
உணவுடன் அல்லது உணவு இல்லாமல் Sinarest New மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
நோயின் தீவிரத்தை பொறுத்து எவ்வளவு கால அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர் பரிந்துரைப்பார், மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்கள் முழுமையும் தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.
மருந்தை எடுக்கத் தொடங்கியதும் அறிகுறிகள் குறைந்தாலும் முழுமையான நாட்களுக்கு எடுக்கவும், சுயமாக மருந்துகளை நிறுத்த வேண்டாம்.
பக்கவிளைவுகள்
குமட்டல்
வாந்தி
தூக்கம்
மயக்கம்
தலைவலி
இது பொதுவான பக்கவிளைவுகளே, தானாகவே சரியாகிவிடும், எனினும் பக்கவிளைவுகள் தொடர்ந்தாலோ, தீவிரமாக இருந்தாலோ மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
வேறு ஏதேனும் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
Sinarest New மாத்திரைகள் பயன்படுத்தும் போது ஆல்கஹால் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும், ஏனெனில் இது பக்கவிளைவுகளை அதிகரிக்கலாம்.
கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
முக்கியமானவை
* Sinarest New மாத்திரைகள் பயன்படுத்தும்போது ஆல்கஹால் எடுத்துக்கொள்வது ஆபத்தானது.
* கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
* தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு பாதுகாப்பானது என்றாலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்க வேண்டாம்.
* Sinarest New மாத்திரைகள் எடுத்த பின்னர், வாகனங்களை இயக்குவது ஆபத்தானதாக முடியலாம்.
* சிறுநீரக நோயாளிகளும் மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
* கல்லீரல் நோயாளிகள் Sinarest New மாத்திரைகளை முடிந்தளவு தவிர்க்கவும், இது பாதுகாப்பானது அல்ல.
எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.