வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க- இந்த பொடியை நீரில் கலந்து ஊற்றுங்க
நீங்கள் வளர்த்த எலுமிச்சை செடி 3,4 வருடங்கள் ஆகியும் பூக்கவோ காய்க்கவோ இல்லை எனில் இந்த பதிவை படித்ததன் பின்னர் பல வருடம் காய்க்காத எலுமிச்சையும் காய்க்கும்.
எலுமிச்சை செடி
பலருக்கும் வீட்டை சுற்றி செடிகள் வளர்பது தாவரங்கள் வளர்க்க ஆர்வம் கொட்டி கிடக்கும். அப்படி நீங்கள் வைக்கும் தாவரமோ செடியோ காய்க்கவில்லை என்றால் அது உங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கும்.
அந்த வகையில் எலுமிச்சை செடியை காய்க்க வைப்பது கொஞ்சம் சிரமமான காரியம். இதற்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் மட்டுமே புதிய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.
கவாத்து என்பது பழைய பக்க கிளைகளை வெட்டி அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை பெறும் முறையாகும். அந்தவகையில் எலுமிச்சை செடி வைத்து இரண்டு மூன்று வருடங்கள் பூக்காமல் காய்காமல் இருந்தால் அதற்கு சிறந்த வழி உள்ளது.
1. முதலில் செடியில் காய்ந்த குச்சிகள் இருந்தால், அவற்றை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும். இவை பூச்சித் தாக்குதலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2. எலுமிச்சை செடிக்கு முழு நேர சூரிய ஒளி மிகவும் அவசியம். போதுமான சூரிய ஒளி இல்லையென்றால், பூக்கள் உருவாகாது.
3. எலுமிச்சை செடிக்கு அதிகப்படியான தண்ணீர் ஊற்றக்கூடாது. மேல் மண் காய்ந்திருக்கிறதா என்று சோதித்த பின்னரே தண்ணீர் விட வேண்டும்.
4. எலுமிச்சை செடிக்கு மென்மையான கவாத்து செய்வது அவசியம். நுனியை லேசாக வெட்டி விடும்போது புதிய கிளைகள் வளரும். புதிய கிளைகள் வளரும்போது நிறைய புதிய பூக்கள் உருவாகும்.
இயற்கை உரம்
வீட்டில் படிகார கல் இருந்தால் அதை எடுத்து அதை உரமாக பயன்படுத்தலாம். படிகாரக் கல்லில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், எலுமிச்சை செடியில் நிறைய பூக்கள் பூக்க இது உதவியாக இருக்கும்.
இதை மண் காய்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மண் லேசாக ஈரமாக இருக்கும்போது, ஒரு சிறிய துண்டு படிகாரக் கல்லை எடுத்து நன்கு பொடி செய்து கொள்ளுங்கள்.
இந்த படிகாரக் கல், மண்ணில் உள்ள பூச்சித் தாக்குதல் அல்லது வேர்களில் உள்ள பூஞ்சையைக் கட்டுப்படுத்தவும் உதவும். தொட்டியின் ஓரங்களில் சுற்றிலும் தூவி விட்டு, மண் ஈரப்பதமாக இருப்பதால் குறைந்த அளவு தண்ணீர் ஊற்றவும்.
ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்துவது செடிக்கு நல்லதல்ல. ஒரு மாதத்திற்கு ஒரு முறை இதை பயன்படுத்தினால் போதும்.
இந்த முறை ஒரு பக்கம் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிறிய படிகாரக் கல்லை நான்கு முதல் ஐந்து வினாடிகள் மட்டும் போட்டு உடனடியாக வெளியே எடுத்து விடவும்.
அதாவது, மண்ணைக் கிளறி விடும் நேரம் மட்டுமே படிகாரக் கல் தண்ணீரில் இருக்க வேண்டும். இந்த ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு செடிக்கு அப்படியே பயன்படுத்த வேண்டும்.
ஒரு செடிக்கு ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றினால் போதும். படிகாரக் கல் உரத்தை இட்ட பிறகு, மேல் மண் காய்ந்திருக்கும்போது மட்டுமே அடுத்த முறை தண்ணீர் விட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |