அரை கிளாஸ் ஜீஸில் எடையை குறைக்கலாம்! எப்படி செய்றாங்கனு தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு எடையை சரியாக வைத்து கொள்வது மிகப்பெரிய டாஸ்க்காக இருக்கின்றது.
அந்த வகையில் உடல் எடையை குறைப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
இது உடல் ஆரோக்கியம் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் நாம் வீடுகளில் கற்றாழையை எந்த காலப்பகுதியிலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்க்கலாம்.
இந்திய ஆயுள்வேத வைத்திய முறைகளில் கற்றாழையில் எப்போதும் இல்லாமல் இருக்காது.
இதன்படி, எடையை மிக இலகுவாக குறைக்கும் கற்றாழை ஜீஸ் எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கற்றாழை ஜீஸ் குடித்தால் என்ன நடக்கும்?
உடல் எடை குறையும்
சிறந்த செரிமானத்திற்கும் உதவுகின்றது.
உடலில் நீர் தேக்கத்தை அதிகரிக்கும்
உடலை சுத்தப்படுத்தும்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்
தேவையான பொருட்கள்
கற்றாழை - 1 துண்டு.
தண்ணீர் - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஜீஸிற்கு தேவையான கற்றாழைகளை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் கற்றாழையின் அக்கப்பக்கங்களில் இருக்கும் பச்சை தண்டை நீக்கி விட்டு தண்ணீர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து கொஞ்சமாக டம்பளரில் ஊற்றி குடிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
கற்றாழை ஜீஸ் கொஞ்சமாக தான் குடிக்க வேண்டும். அளவு கூடினால் ஆபத்து நிச்சயம்.