சருமத்திற்கு கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
பல வகையான மருத்துவ குணங்களை கொண்ட கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் வைட்டமின்கள் தாதுக்கள் நிரம்பி காணப்படுகிறது. மற்றும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வைட்டமின் A, C மற்றும் E ஆகியவை கற்றாழை ஜெல்லில் காணப்படுகின்றன.
சருமம் வைட்டமின் குறைபாட்டால் உண்டாகும் பாதிப்பை இது குறைக்கிறது. இந்த ஜெல்லில் அதிகளவு நீாச்சத்து உள்ளது. வறண்ட சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவினால் சருமம் மென்மையாகும்.
சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதற்கு கற்றாழை ஜெல்லில் 2 சொட்டு வைட்டமின் E எண்ணெய் மற்றும் 5 சொட்டு எலுமிச்சை சாறு கலக்கவும்.
இந்த பேஸ்ட்டை அழுக்கு இருக்கும் இடத்தில் தடவவும். இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறையும். இந்த ஜெல்லை நீங்கள் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்து பயன்படுத்தலாம்.
பொதுவாக இரவில் உறங்க முன் கற்றாழை ஜெல் சருமத்தில் பூசிவிட்டு படுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |