ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டுமா? அப்போ கற்றாழை இருந்தா போதும்
பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல நீளமான, அடர்த்தியான கூந்தலை பெற வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும்.
ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இன்றைய காலத்தில் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் போன்ற முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகம் தான். இதற்கு இயற்கை முறையில் கூட தீர்வு காண முடியும்.
அந்த வகையில் முடியை இயற்கையாக அடர்த்தியாக வளர வைக்க கற்றாழையை எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழையை எப்படி பயன்படுத்துவது?
கற்றாழை ஜெல்லை லாவெண்டர் அல்லது ரோஸ்மேரி எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்திக்கொள்ளலாம். 30 நிமிடங்களுக்கு பிறகே உங்களது முடியை அலசவேண்டும்.
கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்ப்பதனால் முடிக்கு ஊட்டமளிக்கக்கூடும். அதை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியில் மசாஜ் செய்யதப்பின் ஒருமணிநேரம் கழித்து முடியை அலசவேண்டும்.
கற்றாழை ஜெல்லை தண்ணீருடன் சேர்த்து இறுதியில் உங்கள் முடியை அலச பயன்படுத்திக்கொள்ளவும். இது pH நிலையை சமப்படுத்தவும், மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
கற்றாழை ஜெல்லை தேனுடன் சேர்த்து உங்களது உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்தவுடன் 20-30 நிமிடங்களுக்கு அதை விட்டு பின்னர் அலசவேண்டும்.இது ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் சிறந்த தீர்வாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |