கணவருக்கு நிகராக சொத்து வைத்திருக்கும் அல்லு அர்ஜுன் மனைவி- எத்தனை கோடி தெரியுமா?
அல்லு அர்ஜுன் மனைவி- சினேகா ரெட்டியின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சினேகா ரெட்டி
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன்.
இவருடைய அன்பு மனைவி தான் சினேகா ரெட்டி, சினேகா ரெட்டி ஹைதராபாத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரது தந்தை கஞ்சர்சலா சந்திரசேகர் ரெட்டி, தொழில் முனைவோர் மற்றும் சைண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி தலைவராக இருக்கிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சினேகா ரெட்டி- நடிகர் அல்லு அர்ஜூனை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு அல்லு அயன் என்ற மகனும் கடந்த 2016ல் அல்லு அர்ஹா என்ற மகளும் பிறந்தார்கள்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய சினேகா ரெட்டி மசாசூசெட்ஸ் நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவில் கம்யூட்டர் சைன்ஸ் பிரிவில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
இவ்வளவு படிப்பை முடித்த சினேகா ரெட்டி, சைண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் இயக்குநராக இருந்து வருகிறார்.
இதன் மூலமாக சிறந்த அனுபவத்தை பெற்று கொண்டுள்ளதுடன் சினேகா ரெட்டி 2016 ஆம் ஆண்டு ஜூப்ளி ஹில்ஸில் ஸ்டூடியோ பிகாபூ என்ற ஆன்லைன் போட்டோ ஸ்டூடியோவை துவங்கியுள்ளாராம்.
இப்படி பல நிறுவனங்களை நடத்தி வரும் சினேகா ரெட்டியின் நிகர சொத்து மதிப்பு ரூ.42 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |