புஸ்பா பட நாயகனுக்கு வந்த சோதனை- காவல்துறையின் அதிரடி நடவடிக்கை- கண்ணீரில் மனைவி
நடிகர் அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது அவரை காவல்துறையினர் காவல் துறை வாகனத்தில் அழைத்து சென்ற சம்பவம் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
புஷ்பா-2
இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த புஷ்பா-2 திரைப்படம் வெளியாகி வெற்றிநடைப் போட்டு கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் பாட்னாவில் வெளியிடப்பட்ட புஷ்பா-2 ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புஷ்பா படத்தில் கதாநாயகர் கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுனின் தோற்றமும், கச்சிதமான உடலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
42 வயதான அல்லு அர்ஜுன் அவரது வசீகரிக்கும் தோற்றம், மின்னல் வேகா நடனம் மற்றும் ஈர்க்கக்கூடிய உடலமைப்பு சினிமா பிரபலங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
இந்த படத்தில் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் அவரது தோற்றம் கம்பீரமாக உள்ளது என கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
காவல்துறையினருடன் சென்ற அல்லு அர்ஜுன்
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் படத்திற்கு வந்த ரசிகை ரேவதி உயிரிழந்த வேலையில் அவருடைய மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக தெலங்கானா காவல்துறையினர் அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது, அல்லு அர்ஜுன் வரப்போவதாக எங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த முன் அறிவிப்பினை அல்லு அர்ஜுனும் தெரிவிக்கவில்லை, அதே சமயம் சந்தியா திரையரங்க உரிமையாளரும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணைக்கு ஆஜரான, நடிகர் அல்லு அர்ஜுனை, தெலங்கானா காவல்துறை, தங்களது காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இதனால் காவல்துறை அல்லு அர்ஜுனை கைது செய்துவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |